தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ராணிப்பேட்டையில் செய்தியளார்களைச் சந்தித்தார். அப்போது, “மற்ற மாநிலங்களில் முதலமைச்சர் இன்று என்ன திட்டம் அறிவிக்கப் போகிறார் என மக்கள் எதிர்பார்ப்பார்கள். ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தினமும் ஒரு வீடியோ போட்டுக் கொண்டிருக்கிறார். சட்டம் ஒழுங்கை பராமரிக்காமல் சட்டையை மாற்றிக் கொண்டிருக்கிறார். என்னை இந்தி இசை என்று கூப்பிட்டால் கெட்ட கோபம் வரும். நீங்கள் என்ன தமிழை வளர்த்துள்ளீர்கள்” என திமுகவுக்கு கேள்வி எழுப்பினார்.