நிலத்தகராறு.. பக்கத்து வீட்டுக்காரரை கொன்ற நபர் கைது

50பார்த்தது
நிலத்தகராறு.. பக்கத்து வீட்டுக்காரரை கொன்ற நபர் கைது
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த சசி (65) என்பவரும், மணியன் என்பவரும் பக்கத்து வீட்டுக்காரர்கள். வீட்டு எல்லை பிரச்சனை காரணமாக அடிக்கடி அவர்களுக்குள் தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று மணியன் சர்வேயர் ஒருவரை அழைத்து வந்து இடத்தை அளந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சசி அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, வீட்டில் இருந்த கத்தியை எடுத்துச் சென்ற மணியன், சசியை கொடூரமாக குத்தி கொலை செய்தார்.

தொடர்புடைய செய்தி