சென்னை புறநகர் மின்சார ரயிலில் அடிபட்டு பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தின் பதைபதைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இருந்த பெண் மீது புறநகர் மின்சார ரயில் மோதியதில், அவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். இதனை அருகிலிருந்த நபர் செல்போனில் வீடியோ பதிவு செய்திருந்தார். அந்தப் பெண் தண்டவாளத்தை கடக்கும்போது ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாரா? அல்லது தற்கொலை செய்யும் நோக்கில் அங்கு சென்றாரா? என போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.