கடலூரில் பள்ளி மாணவிகளை கடத்தி சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதற்கு இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற தம்பதியை எட்டு ஆண்டுகால தேடுதல் வேட்டைக்கு பிறகு சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக இருந்த சதீஷ்குமார் கோவையிலும், அவர் மனைவி தமிழரசி திருவண்ணாமலையிலும் தங்கி வேலை செய்து வந்த நிலையில் தகவலின் பேரில் இருவரையும் பிடித்த போலீசார் கடலூருக்கு அழைத்து வந்தனர்.