உ.பி: மதுரா மாவட்டம், விருந்தாவன் பகுதியில் இளைஞர் ஒருவர் யூடியூப் வீடியோக்களை பார்த்து தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்ய முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜா பாபு வயிற்று வலிக்கு பலமுறை மருத்துவர்களை அணுகியும் நிவாரணம் கிடைக்காத விரக்தியில், யூடியூப் பார்த்து தனக்குத்தானே அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு 11 தையல்களை போட்டுள்ளார். அதன்பின், ராஜா பாபுவின் நிலை மிகவும் மோசமானதை கண்ட குடும்பத்தினர், அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.