கிள்ளியூர் - Killiyur

பொன்னப்ப நாடார் மணிமண்டபம்: முதல்வரிடம் எம்.எல்.ஏ மனு

பொன்னப்ப நாடார் மணிமண்டபம்: முதல்வரிடம் எம்.எல்.ஏ மனு

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமார் வழங்கிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: - குமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள பாலவிளை குக்கிராமத்தில் 1923 - ல் ராகவன், அம்பாள் தம்பதியினருக்கு பிறந்தவர் பொன்னப்ப நாடார். சிறந்த கல்வியாளர். இவரது இளமை காலத்தில் திருவிதாங்கூர் கொச்சி சமஸ்தானத்தின் ஆட்சியாளர்களால் ஜாதிய வன்கொடுமை தலைவிரித்தாடியது. இதை எதிர்த்து பள்ளி பருவத்திலேயே போராடி உள்ளார். இந்திய சுதந்திர போராட்டங்களில் கலந்து கொண்டார். வழக்கறிஞர் ஆன பிறகு ஏழை மக்களின் வழக்குகளை இலவசமாக வாதாடியவர். தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியால் சிறந்த எதிர்க்கட்சித் தலைவர் என்றும் குமரி கோமேதகம் என்றும் பாராட்டபட்டவர். 1976 ம் ஆண்டு அக்டோபர் 12 ம் தேதி பம்பாய் விமான விபத்தில் மறைந்தார். தமிழக அரசியலில் மக்களின் மனம் கவர்ந்த தலைவராய், நேர்மையின் சிகரமாய் தன்னலம் கருதாமல் பொதுமக்களுக்கு சேவை செய்தவருக்கு நாகர்கோவிலில் படிப்பகத்துடன் கூடிய மணிமண்டபம் அமைத்திட வேண்டும். என மனுவில் கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகையும் உடனிருந்தார்.

வீடியோஸ்


ఉమ్మడి వరంగల్ జిల్లా