கார் விபத்தில் ஒருவர் பலி.. 6 பேர் படுகாயம்

57பார்த்தது
கார் விபத்தில் ஒருவர் பலி.. 6 பேர் படுகாயம்
மதுரை மாவட்டத்தில் உள்ள அழகர்கோயிலில் சாமி தரிசனம் முடித்துவிட்டு ஒரு குடும்பம் காரில் திரும்பிக்கொண்டிருந்தது. அப்போது, சாலை நடுவில் பழுதாகி நின்ற சரக்கு லாரியின் மீது எதிர்பாராத விதமாக கார் மோதியது. இந்த விபத்தில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குழந்தைகள் உள்ளிட்ட 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். விசாரணையில் அவர்கள் சென்னையைச் சேர்ந்த 6 பேர், குடும்பத்துடன் மதுரைக்கு வந்தது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி