மலையாள திரைப்படத் துறை, பிப்ரவரியில் மட்டும் ரூ.52 கோடி இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், “மலையாள திரையுலகம் பிப்ரவரி மாதம் மட்டும் ரூ.52 கோடி இழப்பை சந்தித்துள்ளது. வெளியான 17 படங்களில், ‘ஆபீசர் ஆன் டூட்டி’ என்ற ஒரே ஒரு படம் மட்டும் தான் வெற்றிப் பெற்றது. அதே சமயம் மிகப்பெரிய தோல்வி படமான ‘லவ்டேல்’ ரூ.10,000 மட்டுமே வசூலித்தது. ஜனவரியில் 28 படங்கள் வெளியான நிலையில், ரூ.110 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.