தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. கடந்த 1-ம் தேதி மாணவர் சேர்க்கை தொடங்கியது. அதைத்தொடர்ந்து, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக தற்போது வரை நடந்து வருகிறது. இந்நிலையில், இன்று (மார்ச்.20) ஒரே நாளில் மட்டும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மேலும், மொத்தம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 268 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.