விளவங்கோடு - Vilavengodu

களியக்காவிளை: அரசு எடை மேடை திறப்பு

களியக்காவிளை: அரசு எடை மேடை திறப்பு

களியக்காவிளை பேரூராட்சி குட்பட்ட குமரி கேரளா எல்லைப் பகுதியான ஒற்றாமரத்தில் மாவட்ட கனிம வள அறக்கட்டளை மற்றும் பேரூராட்சி பொது நிதியில் ரூ 17 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் 60 டன் எடை கொண்ட அரசு எடை மேடை அமைக்கப்பட்டது. இந்த அரசு எடை மேடையை பேரூராட்சி தலைவர் சுரேஷ் இன்று (அக்.,4) திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் செயல் அலுவலர் சந்திரகலா, துணைத் தலைவர் பென்னட்ராஜ், உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ரிபாய், தாஸ், பாபு, வின்சென்ட், நிஷா, உமாமகேஸ்வரி, டெல்பின் ஜெமிலா, விஜயா, ஜெயகலா, சுசீலா, சுனிதா, விஜயகுமாரி, சாமுவேல் ஜார்ஜ், தங்கராஜ் மற்றும் பேருராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


ఉమ్మడి వరంగల్ జిల్లా