நகம் வெட்டாததால் பள்ளி மாணவனை அடித்த ஆசிரியர் மீது வழக்கு

66பார்த்தது
நகம் வெட்டாததால் பள்ளி மாணவனை அடித்த ஆசிரியர் மீது வழக்கு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் அரசுப் பள்ளியில், மாணவனை அடித்ததாக ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர், நகம் வெட்டாமல் பள்ளிக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்டிக்கும் விதமாக உயிரியல் ஆசிரியர் கருத்தப்பாண்டி என்பவர், மாணவனை அடித்ததாக தெரிகிறது. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி