சிரோகி ஆடுகள் நன்கு பெரிய அளவிலும், அதிக எடையிலும் வளர்வதால் ஆடுகளை வளர்ப்பவர்களுக்குச் சிறந்த லாபம் ஈட்டி தரும் ஓர் ஆட்டு இனமாக உள்ளது. இந்த ஆடுகள் மற்ற ரக ஆடுகளைக் காட்டிலும் பால் சுரப்பு அதிகமாகக் கொண்டிருக்கும். இவை இறைச்சி தேவைக்காக வளர்க்கப்படுகின்றன. சிறப்பான கவனிப்பு இல்லாத பட்சத்திலும் இந்த ஆடுகள் அதிகம் எடை வளரக்கூடியவை. அதனால் சிரோகி ஆடுகள் வளர்ப்பில் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.