குளச்சல் - Kulachal

ஐஆர்இ மணல் எடுப்பதால் பாதிப்பு இல்லை; தொழிற்சங்கங்கள் பேட்டி

மணவாளக்குறிச்சியில் மத்திய அரசின்  ஐ.ஆர்.இ. மணல் ஆலை சார்பில்  கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட கடற்கரைகளில் 1144 ஹெக்டேர் பரப்பளவில் மணல் எடுப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்த திட்டத்துக்கு தற்போது குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் எதிர்ப்பு கிளம்பி போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.         இந்த நிலையில் ஐ.ஆர்.இ தொழிற் சங்க சி.ஐ.டி.யு. தலைவர் ராமச்சந்திரன், பி.எம்.எஸ். தலைவர் முருகேசன், ஹெச்.எம்.எஸ். தலைவர் சின்னநாடான், ஐ.என் டி.யு.சி. செயல் தலைவர் வஞ்சி மார்த்தாண்டன் ஆகிய தொழிற்சங்கத்தினர் கூட்டாக நேற்று (செப்.,23) பேட்டியளித்தனர். பேட்டியில் அவர்கள் கூறியதாவது: - இத்திட்டத்திற்கு எதிராக சிலரால் பரப்பப்பட்டு வரும் எதிர்மறை கருத்துக்கள் ஏற்புடையதல்ல. இதற்காக எக்காரணத்தைக் கொண்டும் நிலம் கையகப் படுத்தப்படமாட்டாது. காலியாக உள்ள இடங்களில் மட்டுமே நில உரிமையாளார்களின் அனுமதி பெற்று மண் எடுக்கும் பணி மேற்கொள்ளப்படும். மணல் எடுக்கும் முறையானது வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம் தோண்டுவது போல் பொக்லைன் எந்திரங்களை மட்டும் உபயோகப்படுத்தி எடுப்பதினால் சுற்றுச்சூழலுக்கோ, சுற்றுப்புற பகுதிகளுக்கோ எப்பொழுதும் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. என அனைத்து தொழிற்சங்கங்களும் உறுதி அளிப்பதாக பேட்டியில் கூறப்பட்டது.

வீடியோஸ்


ఉమ్మడి వరంగల్ జిల్లా