உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் பெண் ஒருவர், சேமியாவில் விஷம் கலந்து தனது கணவரை கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2019ஆம் ஆண்டு தம்பதிக்கு திருமணம் ஆன நிலையில், அவ்வபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கணவரின் தோற்றம் பிடிக்காததால் பெண் அவரை கொலை செய்ய முடிவு செய்து, சேமியாவில் விஷம் கலந்து கொடுத்தார். நீண்ட சிகிச்சைக்கு பின் குணமடைந்த பெண்ணின் கணவர், இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.