கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஒரே நிற சட்டைக்காக இளைஞர்கள் சண்டை போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோழிக்கோட்டின் நாதபுரத்தில் உள்ள கல்லாச்சி சாலையில் உள்ள துணிக்கடைக்கு கடந்த 17ஆம் தேதி இரவு 11 மணிக்குச் சென்ற இளைஞர்கள், தங்களுக்கு அதே சட்டைதான் வேண்டும் என கூறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். தகராறு முற்றிய நிலையில், நடுவீதியில் இளைஞர்கள் தாக்கிக்கொண்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், இளைஞர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.