நாகர்கோவில் அருகே இறால் வளர்ப்பு பயிற்சி முகாம் துவக்கம்

54பார்த்தது
தமிழ்நாடு மீன் வளத்துறை சார்பாக குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ராஜாக்கமங்கலம் பகுதியில் அமைந்துள்ள அரசு மீன்வள பல்கலைக்கழகத்தில், வளம் குன்றா நீருயிரி வளர்ப்பு மையத்தில் இறால் வளர்ப்பு குறித்து 3 நாட்கள் பயிற்சி நேற்று தொடங்கியது. இதில் உபரி நிலங்களில் இறால் பண்ணை அமைப்பது, உணவு கொடுப்பது, இறால் இனப்பெருக்கம், நோய் மேலாண்மை, சந்தைபடுத்துதல் உள்ளிட்டவை குறித்த தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. இதில் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி