சந்தை மூலதனத்தால் உலகின் நான்காவது பெரிய விமான நிறுவனமாக இண்டிகோ உருவெடுத்துள்ளது. அதன் தாய் நிறுவனமான இன்டர்குளோப் ஏவியேஷன் 2விழுக்காடு பங்கு உயர்வைக் கண்டது. இதையடுத்து, அதன் சந்தை மதிப்பு ரூ.1.97 லட்சம் கோடியாக உயர்ந்தது. வலுவான சந்தை நிலை மற்றும் விரிவாக்க திட்டங்களுடன், இண்டிகோ தனது உலகளாவிய இருப்பை வளர்த்து வருகிறது. அதே நேரத்தில், இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.