கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (மார்ச் 20) மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தலைமையில் நாகர்கோவிலில் நடைபெற்றது. கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கொடுத்தனர். மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க ஆட்சியர் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.