திரிபுரா மாநிலத்தில் உள்ள அகர்தலாவில் மாற்றுத்திறனாளியான தனது மனைவியை, நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து கணவர் கூட்டு பலாத்காரம் செய்துள்ளார். தனது மாமனார், மாமியார் வீட்டில் மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று வீட்டில் மனைவி மட்டும் தனியே இருந்தபோது நண்பர்களுடன் கணவர் மது அருந்தியுள்ளார். பின்னர் போதையில், நண்பர்களுடன் சேர்ந்து அத்துமீறியுள்ளார். இதில் பெண்ணின் கணவர் கைதான நிலையில், மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.