குமரி மாவட்ட ஜாக்டோ ஜியோ கூட்டமைப்புசார்பில் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெனட்ஜோஸ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சுபின், தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும், பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண் 243-ஐ ரத்து செய்ய வேண்டும், 21 மாத ஊதிய மாற்று நிலுவைத் தொகை வழங்க வேண்டும்,
சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் மூட்டா பொருளாளர் ராஜ ஜெயசேகர் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.