நாகர்கோவிலில் லாட்டரி விற்றவர் கைது

73பார்த்தது
நாகர்கோவிலில் லாட்டரி விற்றவர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசோபன் மீனாட்சிபுரம் தளவாய் தெரு பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் நின்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினார். அதில் அவர், கோதைகிராமம் சிவன்கோவில் தெருவைச் சேர்ந்த சந்திரன் (வயது70) என்பதும், அங்கு லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தும் தெரியவந்தது. இதையடுத்து சந்திரனை கைது செய்து அவரிடம் இருந்து 5 லாட்டரி சீட்டுகள், ரூ. 200 ஆகியவற்றை பறிமுதல் செய்தார்.

தொடர்புடைய செய்தி