இந்தி திணிப்பு நடைபெறும் என்பதால் புதிய கல்விக் கொள்கையை ஏற்க தமிழ்நாடு அரசு மறுத்துவிட்டது. இதனால் தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய நிதியை தர முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், "இன்னொரு மொழியை கற்கச் சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை. பொதுப்பட்டியலில் இருக்கும் கல்வியில் முடிவெடுக்க குறைந்தபட்சம் மாநில அரசுடன் அமர்ந்து பேசி முடிவெடுத்தீர்களா?" என கேள்வி எழுப்பினார்.