நாடு முழுவதும் இயக்கப்படும் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை 4-ல் இருந்து 2-ஆக இந்திய ரயில்வே குறைத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், “சமூக வலைத்தளம் முழுக்க ரயில் பரிதாபங்கள் வீடியோக்களைப் பார்த்தோம். அதைப் பார்த்தாவது எளிய மக்களுக்கான Unreserved பெட்டிகளைக் கூட்டுவார்கள் என்று பார்த்தால், வழக்கம்போல பரிதாபங்களைத்தான் மேலும் கூட்டியுள்ளது Sadist அரசு” என குறிப்பிட்டுள்ளார்.