மும்மொழிக் கொள்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மாநில துணைத்தலைவர் கரு நாகராஜன், "மும்மொழிக் கொள்கை என்றால் இந்தி திணிப்பு என்று தவறாக பரப்பப்படுகிறது. கடந்த காலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் தான் இந்தி திணிப்பு நடைபெற்றது. ஆனால் பிரதமர் மோடி தமிழுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். இவரது ஆட்சியில் மும்மொழிக் கொள்கையில் இந்தி கிடையாது. மும்மொழிக் கொள்கையில் மற்ற மொழிகளையும் கற்கலாம்" எனக் கூறியுள்ளார்.