புதிய கல்விக் கொள்கையை ஏற்காவிடில் ரூ.5,000 கோடியை தமிழகம் இழக்க நேரிடும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுவது தமிழக மக்களிடையே கோபத்தை ஏற்படுத்துகிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக அரசு பயனற்ற விவாதங்கள் செய்வதைத் தவிர்த்து நடுவண் அரசோடு பேசி சுமூக முடிவை எட்ட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.