கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைச்சர் கீதா ஜீவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெறும் வாய்ச்சவடால் விடுபவர் தான்; அவர் பேசுவதை அவரை வாபஸ் பெற்றுக் கொள்வார்; திமுகவை அழிக்க வேண்டும் என நினைத்தவர்கள் அழிந்து போனதாக தான் வரலாறு; நாங்கள் சொன்னதைத்தான் செய்வோம்; செய்வதைத்தான் சொல்வோம்; திமுகவை யாரும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது" என தெரிவித்தார்.