“திருப்பூர் மாவட்டம் பல்லடம் மூவர் கொலை வழக்கில், செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி பழங்குடியின மக்களை மிரட்டுவதற்கு பெயர்தான் திராவிட மாடலா?” என சீமான் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அவர் வெளியிட்ட அறிக்கையில், “குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளை பிடிக்கவும் திறனற்றதாக திணறிவரும் திமுக அரசின் காவல்துறை, குற்றம் நடைபெற்றதற்கு பொய்க்காரணம் கற்பிக்கவும், அப்பாவிகளை குற்றவாளிகளாக கட்டமைக்கவும் முயல்வது வெட்கக்கேடானது” என குறிப்பிட்டுள்ளார்.