கலப்பட பனீரை கண்டுபிடிப்பது எப்படி?
பனீர் போன்ற பால் பொருட்களிலும் கலப்படங்கள் அதிகரித்துள்ளன. கலப்பட பனீரை நம்மால் எளிதாக கண்டுபிடிக்க முடியும். பனீர் மிருதுவாகவும் எளிதில் உடையும் தன்மையும் கொண்டது. ஆனால் கலப்பட பனீர் மிகவும் ரப்பர் தன்மையுடன் இருக்கும் அல்லது அதிக மிருதுவாக இருக்கும். மேலும் சமைக்கும் பொழுது பிரவுன் நிறத்துக்கு மாறியும், அதன் வடிவம் மாறாமலும் இருந்தால் அது உண்மையான பனீராகும். கலப்பட பன்னீர் உருகிவிடும் அல்லது ரப்பர் போல் கடினமாகி, அதன் வடிவமும் மாறிவிடும்.