விவாகரத்து வழக்குகளில் தம்பதியரை நேரில் ஆஜராகும்படி நிர்பந்திக்கக்கூடாது என குடும்ப நல நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தம்பதி விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்த நிலையில், இந்திய தூதரகத்தில் இருந்து காணொலியில் ஆஜராகவில்லை எனக்கூறி, வாக்குமூலங்களை பதிவு செய்ய குடும்ப நல நீதிமன்றம் மறுத்துள்ளது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது.