திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படும் என எடப்பாடி பழனிசாமி கனவு காண வேண்டாம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த இபிஎஸ், “நான் கனவு காண்பதாக முதல்வர் சொல்கிறார். ஆனால் அவர் தான் பகல் கனவு காண்கிறார். குடும்ப உறுப்பினர்களுக்கு, மத்தியில் பொறுப்பு வழங்குவதற்காக தான் அவர் கூட்டணி அமைத்துள்ளார். திமுகவில் கருணாநிதி குடும்பம் மட்டுமே உயர் பொறுப்புக்கு வர முடியும்.” என்றார்.