வீட்டிற்குள் சடலமாக கிடந்த தாய் மற்றும் மகன்

67பார்த்தது
வீட்டிற்குள் சடலமாக கிடந்த தாய் மற்றும் மகன்
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் கிராமத்தை சேர்ந்த முத்தம்மாள் (65) தனது மகன் சின்னத்துரை (30) உடன் வசித்து வந்தார். நேற்று (அக். 22) முத்தம்மாள் வீடு திறக்கப்படாமல் வெகுநேரம் பூட்டியே இருப்பதாக வந்த தகவலையடுத்து போலீசார் கதவை உடைத்தனர். உள்ளே தாயும், மகனும் சடலமாக கிடந்தனர். முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லையால் இந்த முடிவை முத்தம்மாள் மற்றும் சின்னத்துரை எடுத்திருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி