250 கிராம் பச்சரிசி, 75 கிராம் துவரம் பருப்பு, 50 கிராம் உளுந்தை ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும். மிக்ஸியில் காய்ந்த மிளகாய், சீரகம், தேங்காய், பெருங்காயத்தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். இந்த இரண்டு மாவு கலவையுடன் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மிளகு, பொடியாக நறுக்கிய தேங்காய் பல் சேர்த்து, எண்ணெய் சூடானதும் அப்பம் போல் ஊற்றவும். பொன்னிறம் ஆனதும் எடுத்தால் கார அப்பம் தயார்.