கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. நேற்று (அக். 22) மாலை 6 மணியளவில் தொடங்கிய மழை இரவில் பலத்த மழையாக கொட்டி தீர்த்தது. மழை காரணமாக கோவை ரயில் நிலையம் சாலை, ரேஸ்கோர்ஸ், அவினாசி சாலை உள்ளிட்ட இடங்களில் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. மேட்டுப்பாளையத்தில் கனமழையால் வெள்ளத்தில் 2 கார்கள் அடித்து செல்லப்பட்ட காட்சி வெளியாகியுள்ளது.