தமிழ்நாட்டில் 1960-களில் சென்னை, தென் ஆற்காடு, வட ஆற்காடு, சேலம், கோவை, நீலகிரி, திருச்சி, தஞ்சை, மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி என 13 மாவட்டங்கள் மட்டுமே இருந்தன. 1966-ம் ஆண்டில் சேலம் மாவட்டத்திலிருந்து தருமபுரி பிரிக்கப்பட்டது. இதுவே தமிழக வரலாற்றில் முதல் மாவட்ட பிரிவாக பார்க்கப்படுகிறது. தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய வட்டங்கள் அடங்கிய பகுதி தருமபுரி மாவட்டமாக தோற்றுவிக்கப்பட்டது.