மத்தியப் பிரதேசத்தின் ஷாஹ்டோல் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற காவலர் நிதின் சம்தாரியா (35), ஆகாஷ் குஷ்வாஹா (23), மற்றும் நந்தினி சிங் (25) ஆகியோர் சிறுத்தை தாக்கியதில் காயமடைந்தனர். தூரத்தில் நின்றிருந்த சிறுத்தையை விளையாட்டாக நினைத்து "வா வா வா" என அழைத்து அதனை வீடியோ எடுத்துள்ளனர். சிறுத்தை என்ன நினைத்ததோ தெரியவில்லை திடீரென்று வேகமாக ஓடி வந்து 3 பேரையும் தாக்கியது. இந்த தாக்குதலில் காயமடைந்த 3 பெரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.