பெங்களூருவில் கட்டப்பட்டுவந்த அடுக்குமாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த விபத்தின்போது கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்த 17 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 6 பேர் மீட்கப்பட்ட நிலையில், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கட்டிடம் இடிந்து விழும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.