நுங்கு வச்சி குல்ஃபி செஞ்சு பாருங்க.! அட்டகாசமா இருக்கும்.!
மிக்ஸியில் தோல் நீக்கப்பட்ட நுங்குகள், பால், சர்க்கரை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் இந்த கலவையை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும். சோள மாவு கரைசலை இந்த கலவையில் சேர்க்க வேண்டும். சிறிது கெட்டியாகத் தொடங்கியவுடன், கடாயில் இருந்து இறக்கி டம்ளர்களில் ஊற்றி, ஐஸ் குச்சியை வைத்து, ஃபிரீசரில் வைக்க வேண்டும். 8 மணி நேரம் எடுத்து வெளியில் எடுத்து சாப்பிட்டால் சுவையான நுங்கு குல்பி ரெடி.