கனவு என்பது நாம் கண்ட காட்சிகள், சிந்தனைகள், நாம் உணர்ந்த உணர்வுகள் ஆகியவற்றின் கலவை, நம் அனுமதி இல்லாமல் நாம் தூக்கத்தில் வெளிப்படுபவை ஆகும். கனவில் தோன்றும் தோற்றங்கள், சத்தங்கள், அசைவுகள், எங்கிருந்து வருகின்றன.? என்பது புரிந்து கொள்ள முடியாதவையாக இருக்கிறது. பல மதங்களில் கனவுகள் நடக்கவிருக்கும் நிகழ்வுக்கான முன்னெச்சரிக்கை என்று நம்பப்படுகிறது. முற்காலத்தின் பிரதிபலிப்பாகவும், எதிர்காலத்தின் முன்னோட்டமாகவும் கனவு கருதப்படுகிறது.