உலகின் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியானது, நியூயார்க்கில் 24 செப் 1844 அன்று, அமெரிக்காவின் முன்னெடுப்பில் நடத்தப்பட்டது. இருநாள் போட்டியாக நடந்த இப்போட்டியில், USA & கனடா அணிகள் மோதின. USA அணி 58 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கனடா அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அத்துடன், பரிசுத் தொகையான $1,000-ஐ கனடா கைப்பற்றியது. இது முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி மட்டுமல்ல, வெவ்வேறு நாடுகளுக்கு இடையே நடந்த முதல் போட்டி எனவும் கூறப்படும்.