நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மளிகை கடை மற்றும் வீடு தீப்பிடித்து எரிந்து சாம்பல் ஆனது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள நான்சச் எஸ்டேட் சிஎஸ்ஐ பள்ளி எதிரே செல்வநாயகம் என்பவர் மளிகை கடை நடத்தி வந்தார் இந்நிலையில் அவர் காலையில் அவரது பிக்கப் வாகனத்தில் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு வியாபாரத்திற்கு சென்றுள்ளார் அவரது மனைவி டேன்டீ எஸ்டேட்டில் பணிபுரிவதால் அவரும் பணிக்கு சென்ற நிலையில் கடையில் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் மட்டும் இருந்துள்ளார் இந்நிலையில் எதிர்பாராத விதமாக தீப்பற்றியதில் கடை மற்றும் வீடு எரிந்து சாம்பல் ஆனது தகவல் அறிந்த குன்னூர் தீயணைப்புத் துறையினர் மற்றும் கொலக்கம்பை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர் வீட்டில் இருந்த முதியவரும் வெளியே வந்ததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது மேலும் தீ விபத்து குறித்து கொலக்கம்பை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.