“எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பெயரில் சாலை" - முதலமைச்சர் அறிவிப்பு

84பார்த்தது
“எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பெயரில் சாலை" - முதலமைச்சர் அறிவிப்பு
சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகர் முதல் தெருவிற்கு மறைந்த பிரபல பாடகர் 'எஸ்.பி. பாலசுப்ரமணியம்' சாலை என பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது எஸ்பிபி வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள தெருவாகும். இது குறித்து அவர் கூறுகையில், “எஸ்பிபி-யின் திரையுலக சேவையை போற்றும் வகையிலும், எஸ்பிபி புகழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையிலும் தெருவிற்கு 'எஸ்.பி. பாலசுப்ரமணியம்' பெயர் சூட்டப்பட உள்ளது” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி