நடப்பாண்டின் 2வது மற்றும் கடைசி சூரிய கிரகணம் அக்டோபர் 2ஆம் தேதி நிகழவுள்ளது. அன்றிரவு 9:13 மணிக்கு தொடங்கி, கிரகணம் நள்ளிரவு 3:17 மணிக்கு முடிவடையும். இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது. சூரிய கிரகணத்திற்கு 12 மணி நேரத்திற்கு முன்பு சூதக் காலம் தொடங்குவதால், இந்த நேரத்தில் கோயில் நடை சாத்தப்படும். வெளியில் செல்வது, சமைப்பது, சாப்பிடுவது, உகந்ததல்ல. சூரிய பகவானின் 108 நாமங்களை உச்சரிக்கலாம்.