ராயக்கோட்டை: குட்கா விற்றவர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை போலீசாருக்கு வன்னியபுரம் பகுதியில் குட்கா விற்கப்படுவதாக வந்த தகவலின் பேரில் போலீசார் நேற்று (செப்.13) அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள கடை ஒன்றில் சோதனை செய்தபோது அங்கு குட்கா விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதை அடுத்து குட்கா விற்றதாக கெண்டேன அள்ளியை சேர்ந்த கார்த்திக் (37) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.