உத்திரப் பிரதேச மாநிலம் அமேதியில் 30 அடி உயரத்தில் உள்ள நெடுஞ்சாலை பெயர்ப்பலகையின் மீது சட்டை இல்லாமல் ஒருவர் ஏறி உடற்பயிற்சி செய்யும் ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த ரீல்ஸ் வீடியோவின் பின்னணியில் மறைந்த பாடகர் சித்து மூஸ்வாலாவின் பாடல் ஒன்று ஒலிக்கிறது. இந்த வீடியோவிற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அமேதி போலீசார் தெரிவித்துள்ளனர்.