தமிழகத்தின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கனிமொழியிடம் நிருபர்கள் இதுகுறித்து கேட்டனர், அதற்கு அவர் பதிலளிக்கையில், துணை முதல்வராக யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது முதல்வர் எடுக்க வேண்டிய முடிவு. அப்படித்தான் உதயநிதியை அவர் தேர்ந்தெடுத்துள்ளார். சிறப்பாக செயல்பட அவருக்கு எனது வாழ்த்துகள். அவருக்கு நான் அட்வைஸ் செய்ய வேண்டிய தேவையில்லை" எனக் கூறினார்.