குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் 500 ரூபாய் நோட்டில் மகாத்மா காந்திக்கு பதிலாக பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கேரின் படம் அச்சிடப்பட்ட ரூ.1.30 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த ரூபாய் நோட்களில் 'Reserve Bank of India'-க்கு பதிலாக 'Resole Bank of India' 'எனவும் State Bank of India'-க்கு பதிலாக 'Start Bank of India' எனவும் அச்சடிக்கப்பட்டுள்ளது.