உதயநிதி ஸ்டாலினுக்கு ஏன் பதவிப்பிரமாணம் செய்யவில்லை?

68பார்த்தது
உதயநிதி ஸ்டாலினுக்கு ஏன் பதவிப்பிரமாணம் செய்யவில்லை?
துணை முதல்வர் பதவி தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டதாவது “ ஒருவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டாலும், வழக்கத்தில் அமைச்சர்தான். முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவையில் ஒருவர்தான். அமைச்சர்களில் கூடுதல் ஊதியமோ, சலுகைகளோ அதிகாரப்பூர்வமாக கிடையாது. துணை முதல் அமைச்சர்கள், அமைச்சர்களாகத்தான் பதவியேற்றுள்ளார்கள் “ என உச்சநீதிமன்றம் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்புடைய செய்தி