நவராத்திரி விழா அக்டோபர் மாதம் 4-ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இந்த விழாவின் போது குமரி மாவட்டத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு சாமி சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்வது பாரம்பரிய வழக்கம்.
இதன்படி சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் விக்ரகம் நாளை 30ம் தேதி சுசிந்திரத்திலிருந்து பத்மநாபபுரம் அரண்மனைக்கு நாளை காலை 6 மணிக்கு விக்ரகம் புறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி கலந்து கொள்கிறார். இதற்காக அவர் இன்று(செப்.29) இரவு கன்னியாகுமரி வருகிறார். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வரவேற்பு அளிப்பார்கள். இந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
பத்மநாபபுரத்திலிருந்து 1-ம் தேதி அம்மன்சிலை, சரஸ்வதி தேவி, வேளிமலை குமாரசாமி சிலைகள் திருவனந்தபுரம் புறப்படும் நிகழ்ச்சி நடைபெறும்.