பெங்களூரில் உள்ள திண்டீஸ் உணவகம் 3டி மூலம் விளம்பரம் செய்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் விளம்பர பலகையில், ஒரு நபர் ஃபில்டர் காபியை ஊற்றி பொதுமக்களுக்கு வழங்குவது போல் அமைந்துள்ளது. மேலும், அந்த விளம்பரப் பலகையில், 3 இடங்களில் கிளை உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ 1 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.