தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் மாணவர் பேரவைத் தேர்தலை நடத்த வேண்டு மென கந்தர்வகோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை வலியுறுத்தி உள்ளார். இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை விளக்கப் பேரணி-பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை புதுக் கோட்டையில் நடைபெற்றது. பேரணி யைத் தொடங்கி வைத்து பொதுக் கூட்டத்தில் இவ்வாறு அவர் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து சட்டமன்றத்தி லும் முறையிடுவேன் என கூறியுள்ளார்.